தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன்
ADDED : 1 hours ago
மாருதி இயக்கத்தில் 'தி ராஜா சாப்' எனும் படத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். தெலுங்கு படம் என்றாலும் தமிழ், ஹிந்தி என பான் இந்தியா வெளியீடாக படத்தை ரிலீஸ் செய்கின்றனர். இதில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் என மூவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர் . தமன் இசையமைத்துள்ளார். பீபுள் மீடியா பேக்டரி நிறுவனம் தயாரிக்கின்றர். 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதியன்று திரைக்கு வருகிறது. இதற்கான விளம்பர நிகழ்ச்சிகளை படக்குழு தற்போது தொடங்கியுள்ளனர். படத்தில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர்களின் கேரக்டர்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே டீசர், இரு பாடல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் இந்த படத்தில் மாளவிகா மோகனன் 'பைரவி' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக அவரின் முதல் பார்வை போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.