ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி
ADDED : 4 minutes ago
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஏற்கனவே தமிழில் கதாநாயகியாக ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் சில வருடங்களாக ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநர் ஆக பணியாற்றி வந்தார். விரைவில் அர்ஜித் கதாநாயகனாக ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அட்லியின் உதவி இயக்குநர் ஒருவர் இயக்க போகிறார்.
தற்போது இதில் அர்ஜித் ஜோடியாக நடிக்க கிர்த்தி ஷெட்டி ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்கிறார்கள். ஏற்கனவே இதில் கதாநாயகியாக நடிக்க மமிதா பைஜூ உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது . இவர் அல்லாமல் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஹிந்தியில் பிரபலமான இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப் உடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.