லியோ : ஜனனி மகிழ்ச்சி
ADDED : 729 days ago
பிக்பாஸ் சீசன் 6-ல் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் ஈர்த்த ஜனனி, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததுமே விஜய் படத்தில் கமிட்டாகிவிட்டதாக செய்திகள் வைரலானது. ஆனால், அதுகுறித்து பெரிய அளவீல் மூச்சுவிடாமல் ரகசியம் காத்தார் ஜனனி. தற்போது விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகியுள்ளது.
இந்நிலையில், லியோ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு, 'விஜய் சார் உடன் நடித்தது எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. இதற்கான வாய்ப்பை கொடுத்த லோகேஷ் கனகராஜிற்கு நன்றி' என பதிவிட்டுள்ளார்.
லியோ படத்தில் ஜனனியின் கதாபாத்திரத்தை பார்த்த ரசிகர்கள், ஜனனி இதுபோல் இன்னும் நிறைய நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.