மீண்டும் ஜோடி சேர்ந்த நானி, பிரியங்கா மோகன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ADDED : 760 days ago
நடிகை பிரியங்கா மோகன் தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தனுஷ், பவன் கல்யாண் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். 'அண்டே சுந்தரனிகி' படத்தின் இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் மீண்டும் நானி புதிய படத்தில் நடிக்கவுள்ளார். நானியின் 31வது படமாக உருவாகிறது.
இதில் நானிக்கு ஜோடியாக நடிக்க நடிகை பிரியங்கா மோகன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியானது. இப்போது படக்குழுவினர் அதை உறுதிப்படுத்தி உள்ளனர். ஏற்கனவே நானி, பிரியங்கா மோகன் இணைந்து 'கேங் லீடர்' எனும் படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .