ரஜினி 171 படப்பிடிப்பு எப்போது : லோகேஷ் கனகராஜ் பதில்
ADDED : 721 days ago
‛மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம்' என தொடர் வெற்றிகளை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக உள்ளார். மீண்டும் விஜய்யை வைத்து இவர் இயக்கிய ‛லியோ' படம் 19ம் தேதி திரைக்கு வந்தது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் சிறப்பாக உள்ளது. கடந்த நான்கு நாட்களில் ரூ.400 கோடி வசூலை எட்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தயாரிப்பு தரப்பு இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் அளித்த ஒரு பேட்டியில், ‛லியோ படம் மக்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி. அதேசமயம் கலவையான விமர்சனங்கள் வருகின்றன. அது என்னவென்று ஆராய்ந்து அடுத்த படத்தில் அதை கவனத்தில் எடுத்துக் கொள்வேன். அடுத்து ரஜினி சாரின் படம் இயக்க உள்ளேன். இதன் படப்பிடிப்பு அடுத்தாண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் துவங்கும்'' என்றார்.