உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிரஞ்சீவி 156வது படம் பூஜையுடன் தொடங்கியது

சிரஞ்சீவி 156வது படம் பூஜையுடன் தொடங்கியது

தெலுங்கு சினிமாவின் சீனியர் நடிகர்களில் ஒருவர் சிரஞ்சீவி. இவர் கடைசியாக நடித்து வெளிவந்த போலா சங்கர் திரைப்படம் தோல்வி அடைந்தது. தற்போது சிரஞ்சீவியின் 156வது படத்தை பிம்பிசாரா பட இயக்குனர் மல்லிடி வசிஷ்டா இயக்குகிறார். இப்படத்தைத் யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் . கடந்த சில மாதங்களாக இதன் முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் பூஜை தொடக்க விழா நடைபெற்றது. எம்.எம். கீரவாணி இசையில் இதன் பாடல் ரெக்கார்டிங் பணிகளை தொடங்கியுள்ளதாக படக்குழுவினர்கள் இன்று அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !