உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛சூர்யாவின் சனிக்கிழமை' படம் பூஜையுடன் துவங்கியது

‛சூர்யாவின் சனிக்கிழமை' படம் பூஜையுடன் துவங்கியது

'அண்டே சுந்தரனிகி' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் விவேக் ஆத்ரேயா, நடிகர் நானி மீண்டும் இணைந்துள்ள படம் 'சரிபோதா சனிவாரம்'. தமிழில் இதற்கு 'சூர்யாவின் சனிக்கிழமை' என தலைப்பு வைத்துள்ளனர். இதில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிக்கின்றனர். டிவிவி எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜெக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். நேற்று இந்த படத்தின் தொடக்க விழா பூஜை நடைபெற்றது. இதில் முதல் காட்சியை எஸ்.ஜே. சூர்யா இயக்கி தொடங்கி வைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதத்தில் துவங்கும் என அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !