வேல்ராஜ் இயக்கத்தில் சசிகுமார்
ADDED : 718 days ago
வேல்ராஜ் ஒளிப்பதிவாளர் ஆக தனுஷ், கார்த்தி, விஷால், ஆர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றியவர். இது அல்லாமல் தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி, தங்கமகன் ஆகிய படங்களை வேல்ராஜ் இயக்கியுள்ளார். தொடர்ந்து கேமராமேனாகவும், நடிகராகவும் பயணித்து வந்த வேல்ராஜ் சிறு இடைவெளிக்கு பின் மீண்டும் படம் இயக்குகிறார். ஜே.எஸ்.பி சதீஷ் தயாரிக்கும் இந்த புதிய படத்தில் நடிகர் சசிகுமார் ஹீரோவாக நடிக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு பணியையும் மேற்கொள்ள உள்ளார். மற்ற பணிகள் நடந்து வருகின்றன. படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.