ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை வெளியிடும் துல்கர் சல்மான்
ADDED : 722 days ago
கடந்த 2014ம் ஆண்டில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வெளிவந்த 'ஜிகிர் தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'ஜிகிர் தண்டா டபுள் எக்ஸ்' என்ற பெயரில் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இதில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இருவரும் இணைந்து நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தற்போது இந்த படத்தை கேரளா மாநிலத்தில் நடிகர் துல்கர் சல்மான் தனது வேவரர் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.