உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லியோ - அமெரிக்காவில் 5 மில்லியன் வசூல்

லியோ - அமெரிக்காவில் 5 மில்லியன் வசூல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'லியோ' படம் உலக அளவில் 461 கோடி வசூலித்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். ஆனால், அந்த வசூல் தொகை குறித்து கடும் சர்ச்சை எழுந்துள்ளது.

இந்நிலையில் இப்படம் அமெரிக்காவில் 5 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்துள்ளதாக அங்கு படத்தை வெளியிட்டுள்ள வினியோக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. விஜய் படமொன்று 5 மில்லியன் வசூலைக் கடப்பது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு “2.0, பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2, ஜெயிலர்' ஆகிய படங்கள் அந்த வசூலைக் கடந்துள்ளன.

5 மில்லியன் யுஎஸ் டாலர் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 41 கோடியே 50 லட்சம். அமெரிக்கா தியேட்டர் உரிமையாக இப்படம் 18 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் 'லியோ' படம் லாபகரமான படமாக அமைந்துள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் இந்த இரண்டு நாட்களிலும் கூட நல்ல வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !