உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குலதெய்வம் கோயிலுக்கு மனைவியுடன் சென்று வழிபட்ட அட்லீ

குலதெய்வம் கோயிலுக்கு மனைவியுடன் சென்று வழிபட்ட அட்லீ

இயக்குனர் அட்லீ கடந்த 10 ஆண்டுகளில் தமிழில் நான்கு படங்களையும் ஹிந்தியில் சமீபத்தில் வெளியான ஜவான் என்கிற படத்தையும் சேர்த்து மொத்தம் ஐந்து படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். இவற்றில் தமிழில் தொடர்ந்து விஜய்யை வைத்து மூன்று படங்களை இயக்கி அவரது ஆஸ்தான இயக்குனராகவே மாறிவிட்டார். இதன் பயனாகத்தான் அவருக்கு பாலிவுட்டில் ஷாரூக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆயிரம் கோடிக்கு மேல் வசூலிக்கும் அளவுக்கு அந்தப் படத்தையும் வெற்றி படமாக்கி விட்டார் அட்லீ.

ஜவான் படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகும் நிலையில் தனது மனைவியுடன் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் இருக்கும் ராஜகோபாலசாமி கோயிலுக்கு சென்று வழிபட்டார் அட்லீ. அதைத்தொடர்ந்து மன்னார்குடிக்கு அருகில் உள்ள வேலுக்குடி என்கிற கிராமத்தில் உள்ள தங்களது குலதெய்வம் கோயிலுக்கும் சென்று வழிபட்டுள்ளார் அட்லீ. ஜவான் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு நேர்த்திக்கடனாக அவர் இந்த வழிபாட்டை நடத்தியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !