மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
677 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
677 days ago
தமிழ் சினிமாவில் காமெடிக்கு பஞ்சம் இருப்பது போல், அழகிய அம்மாக்களுக்கும் பஞ்சம் உள்ளது. முன்னாள் கதாநாயகிகள் அவ்வப்போது பஞ்சத்தை போக்கினாலும் அம்மாவாக நடிக்க இன்றும் இயக்குநர்கள் தேடவேண்டியுள்ளது.
'நான் இருக்கும் போது எதுக்கு அந்த கவலை. அழகிய ஹீரோயின்கள் விரும்பும் அழகிய அம்மா நான்' என ஜாலியாக பேச தொடங்கினார் மதுரை சித்ரா. பெண் பிள்ளைகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என 'பாடமாக' வந்த சித்தார்த்தின் 'சித்தா' படத்தில் மாணவியை காப்பாற்றி போலீசில் ஒப்படைக்கும் கேரக்டரில் நடித்திருக்கிறார் சித்ரா. பலரது கவனத்தை ஈர்த்த சித்ரா, அடுத்தடுத்து ஷூட்டிங்கிற்காக சென்னை, மதுரை என பயணித்து 'பிஸி'யாக இருந்தார். அவரை தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக சந்தித்தோம்.
''நான் 17 ஆண்டுகளாக சினிமா துறையில் இருக்கிறேன். நடிகர் சிங்கமுத்து தயாரித்த மாமதுரை பட ஷூட்டிங் மதுரையில் நடந்தது. சிங்கமுத்துவிடம் என் அக்கா பொண்ணுக்கு சான்ஸ் கேட்டேன். 'நடிப்பெல்லாம் வேணாம். படிக்க சொல்லும்மா' என அவர் கூற, 'ஏன் நாம நடிக்கக்கூடாது' என யோசித்து, சான்ஸ் கேட்டேன். சான்ஸ் கொடுத்தார். அதுதான் ஆரம்பம்.
சில படங்களில் சித்தி, அம்மா, அக்கா கேரக்டர் நடித்தேன். 'டிவி' சீரியல் வாய்ப்பு கிடைத்தது. இன்றும் நல்ல கேரக்டரில் நடிக்க வாய்ப்பு வருகிறது. ஒரே 'டேக்'கில் நடித்து இயக்குநர் களஞ்சியம் உள்ளிட்டோரிடம் பாராட்டு பெற்றிருக்கிறேன். இத்தனை ஆண்டு சினிமா பயணத்தில் எனக்கு அடையாளம் கொடுத்தது 'சித்தா' படம் தான். இயக்குநர் அருண்குமாரின் 4வது படம் இது. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத் படங்கள் அவர் எடுத்திருந்தாலும் சித்தா படம் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது.
இதுகுறித்து மதுரை 'பிரஸ்மீட்'டில் நான் பேசியபோது ஆனந்த கண்ணீர் விட்டு அழுதேன். அது வைரலாகிவிட்டது. தொடர்ந்து படவாய்ப்புகளும் வரஆரம்பித்துள்ளன. ஹீரோயின்கள் விரும்பும் அம்மாவாக இருப்பதால் அம்மா கேரக்டர்தான் கேட்கிறார்கள். எனக்கும் அம்மாவாக நடிக்க தயக்கம் இல்லை'' என்றவரிடம், 'வயதாகிவிட்டால்தானே அம்மா கேரக்டரில் நடிப்பார்கள். உங்க வயசு' என நாம் கேட்க, 'ப்ரோ, நான் யங் மம்மி. ஜஸ்ட் 40தான் ஆகுது' என ஆச்சரியம் தந்து வழியனுப்பினார் சித்ரா.
இவரை வாழ்த்த 90037 73901
677 days ago
677 days ago