கண்ணே கலைமானே சீரியலிலிருந்து விலகியது ஏன்? மனம் திறக்கும் நந்தா மாஸ்டர்
நடன இயக்குநர் நந்தா மாஸ்டர் சின்னத்திரை சீரியல்களில் கதாநாயகனாகவும் நடித்து பிரபலமாகியுள்ளார். அந்த வகையில் அவர் நடித்து வந்த கண்ணே கலைமானே சீரியல் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இதற்கிடையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் காலில் அடிபட்டு ரெஸ்ட் எடுக்க சென்ற அவர், திடீரென சீரியலை விட்டு விலகுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இந்நிலையில், அவர் தற்போது சீரியலை விட்டு விலகியதற்கான காரணத்தை கூறியுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் காலில் அடிபட்ட போதிலும் தன்னை தொடர்ந்து நடிக்க வற்புறுத்தியதாகவும், ஆப்ரேஷன் செய்ய வேண்டிய நிலையிலும் தன்னை நடிக்க அழைத்ததால் சேனல் தரப்புடன் மனகசப்பு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். இதன் காரணமாக தான் கண்ணே கலைமானே சீரியலிலிருந்து விலகிவிட்டதாக நந்தா மாஸ்டர் கூறியுள்ளார். நந்தா மாஸ்டர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நளதமயந்தி என்கிற தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார்.