"உனக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா" என்கிற வசனத்துடன் வெளிவந்த விக்ரம் 62 பட அறிவிப்பு!
ADDED : 708 days ago
நடிகர் விக்ரம் தற்போது 'தங்கலான்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.இதையடுத்து சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் தனது 62வது படத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளனர். உனக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா என்ற வசனத்துடன் வெளியான இதன் அறிமுக வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த படத்தை இதற்கு முன்பு விக்ரமை வைத்து இருமுகன், சாமி 2 படங்களை தயாரித்த சிபு தமின்ஸ் தயாரிக்கின்றார். இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என அறிமுக வீடியோவின் மூலம் அறிவித்துள்ளனர். இந்த படத்தில் மஜா படத்திற்கு பிறகு விக்ரம் முழுநீள ரூரல் படத்தில் இறங்கி நடிக்கவுள்ளார்.