தெலுங்கு படத்தில் ரா ஏஜெண்டாக நடிக்கும் ஷாம்
தமிழ் சினிமாவில் தொடர்ந்து 20 வருடங்களுக்கு மேலாக பயணித்து வருபவர் ஷாம். ஹீரோவாக நடித்து வந்த ஷாம் கடந்த சில வருடங்களாக மற்ற கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு திரையுலகிலும் பிசியாகி விட்டார். இந்த வருட துவக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' படத்தில் விஜய்யின் சகோதரராக நடித்தார்.
தற்போது தெலுங்கில் பிரபல இயக்குநர் சீனு வைட்லா இயக்கி வரும் புதிய படத்தில் ரா ஏஜென்ட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் கோபிசந்த், காவியா தாப்பர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் இத்தாலி நாட்டில் உள்ள மிலன், மடேரா மற்றும் ரோம் உள்ளிட்ட நகரங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது. இதில் ஷாம் பங்குபெற்ற மூன்று ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து படக்குழுவினர் தற்போது இந்தியா திரும்பியுள்ளனர்.