புது வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்த காஜல் அகர்வால்
ADDED : 726 days ago
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் கடந்த 20 வருடங்களாக முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தமிழில் தற்போது 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். 2020 அக்டோபர் மாதம் கவுதம் கிச்சுலு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் இருக்கிறான்.
தன்னுடைய புது வீட்டிற்கு கிரகப் பிரவேசம் செய்தது பற்றி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். கணவர், மகன் ஆகியோருடன் பூஜை செய்யும் புகைப்படங்களைப் பகிர்ந்து, “நான் இதை உங்களுடன் பகிரும் போது பலவிதமான உணர்வுகள். இந்த வாரத் துவக்கத்தில் எங்கள் புதிய வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்தோம். இப்போது எங்கள் வீடாக இருப்பது அன்பின் உழைப்பு. மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறோம். எங்கள் இதயங்கள் மிகுந்த நன்றியுடன் நிரம்பியுள்ளன,” என்று குறிப்பிட்டுள்ளார்.