ஹிப்ஹாப் ஆதி பட இயக்குனர் உடன் கைகோர்க்கும் விக்ரம்
ADDED : 768 days ago
நடிகர் விக்ரம் தற்போது 'தங்கலான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்தாண்டு ஜனவரியில் படம் ரிலீஸாக உள்ளது. இதையடுத்து இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் தனது 62வது படத்தில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவித்தனர். விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு பின் விக்ரமின் அடுத்தபடம் பற்றிய தகவல் வெளிவர துவங்கி உள்ளது. அதன்படி, ஹிப்ஹாப் ஆதியை வைத்து 'அன்பறிவு' என்கிற படத்தைப் இயக்கிய அஸ்வின் ராம் இயக்கத்தில் விக்ரம் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கின்றனர் என்கிறார்கள்.