விஜய் தேவரகொண்டா தம்பி படத்தை தயாரிக்கும் ஞானவேல் ராஜா!
ADDED : 751 days ago
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா சமீபத்தில் தெலுங்கில் நடித்து வெளிவந்த 'பேபி' படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதையடுத்து தெலுங்கு, தமிழ் மொழிகளில் உருவாகும் புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஆனந்த் தேவரகொண்டா புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதனை ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குநர் மிதுன் கிருஷ்ணன் இயக்குகிறார். இதில் கதாநாயகியாக ரித்திகா நாயக் நடிக்கின்றார். இப்படத்திற்கு 'டூயட்' என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.