உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எங்களுக்கெல்லாம் சினிமாவில் மரியாதை இல்லை : ஜானகி தேவி குமுறல்

எங்களுக்கெல்லாம் சினிமாவில் மரியாதை இல்லை : ஜானகி தேவி குமுறல்

சினிமா நடிகையான ஜானகி தேவி மதுரை வட்டார படங்களில் சிறு கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். தற்போது சின்னத்திரையில் பிசியாக நடித்து வரும் ஜானகி தேவி, சீரியலில் நல்ல சம்பளம் கிடைப்பதாகவும், சினிமாவில் தன்னை போன்ற நடிகைகளுக்கு மரியாதையே இல்லை என்றும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அந்த பேட்டியில் அவர், 'சினிமாவில் நயன்தாராவின் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டை விட, எங்களைப் போன்றோரின் சம்பளம் இப்போதும் மிகக்குறைவு தான். நான் நடிக்க போகும் இடத்தில் சென்னை ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கு மட்டுமே ஏசி ரூம் தருவார்கள். என் போன்ற நடிகர்களுக்கு மரியாதையே இருக்காது' என்று கூறியுள்ளார். மேலும், சீரியலில் நடித்த பின்பு தான் சினிமாவில் கூட ரூ.25000 சம்பளம் கிடைப்பதாக கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !