மேலும் செய்திகள்
நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா?
672 days ago
சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ்
672 days ago
விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின்
672 days ago
தமிழ் சினிமாவின் 70 வருட வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த 2023ம் வருடத்தில் படங்கள் வெளியாகும் என்று தெரிகிறது. நேற்று வெளியான ஐந்து தமிழ்ப் படங்களுடன் இந்த ஆண்டில் வெளியான படங்களின் எண்ணிக்கை 200ஐக் கடந்துள்ளது.
தியேட்டர்களில் மட்டும் 196 படங்களும், ஓடிடி தளங்களில் நேரடியாக 6 படங்களும் வெளியாகி உள்ளன. கடந்த சில வருடங்களாகவே ஒவ்வொரு வருடமும் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 200ஐக் கடந்து வருகிறது. ஆனால், இந்த ஆண்டில் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்திலேயே அந்த எண்ணிக்கை வந்தது ஆச்சரியமாக உள்ளது.
இந்த ஆண்டு முடிய இன்னும் எட்டு வாரங்கள் உள்ள நிலையில் வாரத்திற்கு நான்கு படங்கள் வந்தால் கூட 250 படங்கள் வெளியாகிவிடும். இவ்வளவு படங்கள் வெளியானாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறும் படங்களின் எண்ணிக்கை 10 சதவீதம் மட்டுமே உள்ளது. சுமார் 20 படங்கள் வரை இதுவரையில் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளன.
இந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் 'ஜெயிலர், லியோ' இரண்டு படங்களும் தலா 500 கோடி வசூலைக் கடந்த படங்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
672 days ago
672 days ago
672 days ago