உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மிஷ்கின் - விஜய் சேதுபதி கூட்டணி, முழு படமும் ரயிலில்…

மிஷ்கின் - விஜய் சேதுபதி கூட்டணி, முழு படமும் ரயிலில்…

தமிழ் சினிமாவில் மாறுபட்ட படங்களைக் கொடுக்கும் என பெயர் எடுத்த இயக்குனர் மிஷ்கின், மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து பெயர் வாங்கும் விஜய் சேதுபதி இருவரும் புதிய படம் ஒன்றில் இணைந்து பணியாற்ற உள்ளனர்.

மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகும் 'டெவில்' படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு நேற்று நடந்த போது அந்தப் படம் பற்றிய அப்டேட் ஒன்றைக் கொடுத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற பெப்ஸி சங்கத் தலைவர் ஆர்கே செல்வமணியிடம் கோரிக்கை ஒன்றையும் வைத்துக் கேட்டார்.

“அடுத்து விஜய் சேதுபதிய வச்சி ஒரு படம் பண்றேன். அந்தப் படத்துல நிறைய கேரக்டர்ஸ் வராங்க. ஒட்டு மொத்த படமும் டிரெய்ன்ல எடுக்கறேன். நிறைய கேரக்டர்ஸ் வரும் போது ஆறு திருநங்கைகள் வராங்க. மெட்ராஸ் முழுக்கத் தேடிக் கண்டுபிடிச் போய் எடுத்தேன். அவங்க என்ன சொல்றாங்கன்னா, திரைப்படத் துறையில எங்களுக்கு ஏதாவது வாங்கிக் கொடுங்கன்னு கேக்கறாங்க. நான் என்ன கேக்கறன்னா ஜுனியர் ஆர்ட்டிஸ்ட்ல அவங்களுக்கும் வாய்ப்பு கொடுங்க. 100 பேர் அப்படி நடிக்க வராங்கன்னா அதுல 4 பேருக்காவது அவங்களுக்கு வாய்ப்பு கொடுங்க. அவங்க ரொம்ப கஷ்டப்படுறாங்க. சமூகம் அவங்கள அவ்ளோ மோசமா நடத்துது. திரைப்படத் துறை அவங்கள காப்பாத்தும்னு நம்பறாங்க,” என மிஷ்கின் கேட்டார்.

அவர் கேட்டதும், 'உங்கள் கோரிக்கை இப்போதே நிறைவேற்றப்படுகிறது,” என ஆர்கே செல்வமணி பதிலளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !