உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய்க்கு எழுதிய கதையை திருத்தம் செய்த ஏ. ஆர். முருகதாஸ்!

விஜய்க்கு எழுதிய கதையை திருத்தம் செய்த ஏ. ஆர். முருகதாஸ்!

விஜய் நடிப்பில் துப்பாக்கி, கத்தி, சர்க்கார் போன்ற படங்களை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதையடுத்து விஜய்யின் 66வது படத்தையும் அவர் இயக்க இருந்தார். ஆனால் கதையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கடைசி நேரத்தில் அந்த படத்தில் இருந்து ஏ. ஆர்.முருகதாஸ் வெளியேறினார். அதன் பிறகு நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தில் நடித்தார் விஜய்.

இதன் காரணமாக சில ஆண்டுகளாக படங்களே இயக்காமல் இருந்த ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனின் 23வது படத்தை இயக்கப் போகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் தொடங்குகிறது. மேலும் விஜய்க்காக தான் தயார் செய்த அதே கதையை சிவகார்த்திகேயனுக்காக சில திருத்தங்களை செய்து சொன்னபோது அந்த கதையை ஓகே செய்த சிவகார்த்திகேயன், அப்படத்தை தானே தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !