உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் திரைக்கு வரும் ரஜினியின் முத்து!

மீண்டும் திரைக்கு வரும் ரஜினியின் முத்து!


1995ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்த படம் முத்து. இந்த படம் மலையாளத்தில் வெளியான தென்மாவின் கொம்புத்தேன் என்ற படத்தின் ரீமேக் ஆகும். கே. எஸ். ரவிக்குமார் இயக்கிய இந்த படத்தில் ரஜினியுடன் மீனா, சரத் பாபு, ராதாரவி, வடிவேலு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்தார்கள். ஏ. ஆர். ரகுமான் இசை அமைத்திருந்தார். காதல், காமெடி, சென்டிமெண்ட் கலந்த கதையில் உருவான இந்த படம் மீண்டும் இந்த நவம்பரில் ரீ ரிலீஸ் ஆகப்போவதாக அப்படத்தை தயாரித்த கவிதாலயா நிறுவனம் தங்களது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !