உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தெலுங்கில் வெளியாகும் திரிஷாவின் 'தி ரோடு'

தெலுங்கில் வெளியாகும் திரிஷாவின் 'தி ரோடு'

அருண் வசீகரன் இயக்கத்தில் திரிஷா கதையின் நாயகியாக நடித்து அக்டோபர் ஆறாம் தேதி திரைக்கு வந்த படம் தி ரோடு. இப்படத்தில் திரிஷாவுடன் சபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். சாம்.சிஎஸ் இசையமைத்தார். கிரைம் திரில்லர் கதையில் உருவான இந்த படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

இந்த நிலையில் திரிஷாவிற்கு தெலுங்கிலும் ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருப்பதால் 'தி ரோடு' படத்தை தெலுங்கில் டப் செய்து நவம்பர் 10ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியிடுகிறார்கள். மேலும், தி ரோடு, லியோ படங்களை அடுத்து தற்போது விடா முயற்சி, தக் லைப் மற்றும் ராம் பார்ட்-1 என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார் திரிஷா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !