குணசித்ர நடிகையாக வளரும் சஞ்சனா நடராஜன்
ADDED : 694 days ago
கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த ‛ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தில் மலைவாழ் பழங்குடியின பெண்ணாக நடித்திருந்தவர் சஞ்சனா நடராஜன். கதைப்படி பின்னர் அவர் எஸ்.ஜே.சூர்யா மனைவி ஆவார். சஞ்சனா இதற்கு முன்பு 'சார்பட்டா பரம்பரை, ஜகமே தந்திரம்' ஆகிய படங்களில் நடித்தார். சஞ்சனா நடராஜன் தமிழ் மொழியில் மட்டுமல்ல வேறு மொழியிலும் பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். தமிழ் பேசும் சென்னை வாழ் பெண்ணாக இருந்தாலும், தற்போது வேறு சில மொழிகளிலும் நடித்து வருகிறார் அவற்றில் வெளிவர உள்ள படங்கள் தமிழில் 'பாட்டில் ராதா'. பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பிஜாய் நம்பியாரின் 'போர்' மற்றும் மலையாளப் படமான 'டிக்கி டக்கா' படங்களில் நடித்து வருகிறார்.