குலதெய்வ கோயிலுக்கு சென்ற புகழ்!: வைரலாகும் புகைப்படம்
ADDED : 698 days ago
விஜய் டிவி காமெடி நடிகரான புகழ் தற்போது சினிமாவில் பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சில படங்களில் ஹீரோவாகவும் கமிட்டாகிவிட்டார். கேரியரை போலவே குடும்ப வாழ்விலும் பாசிட்டிவான விஷயங்களை சந்தித்து வரும் புகழுக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து அவர் தனது குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு சென்றுள்ள புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
புகழ் தனது காதல் மனைவியான பென்சியை இந்த கோவிலில் வைத்துதான் திருமணம் செய்தார். தற்போது தனது மகளுக்கு பூ முடி எடுக்கும் நிகழ்வையும் தனது குலதெய்வ கோயிலிலேயே வைத்து செய்துள்ளார்.