உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திருமணம் எப்போது? - தமன்னா கொடுத்த பதில்

திருமணம் எப்போது? - தமன்னா கொடுத்த பதில்

பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் டேட்டிங் செய்து வரும் நடிகை தமன்னா விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. திருமணம் பற்றி அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛சினிமாவில் நடிக்க வந்தபோது பத்து ஆண்டுகள் மட்டும் நடித்துவிட்டு, முப்பதாவது வயதில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தேன். இப்போது 30 வயதுக்கு பிறகும் சினிமாவில் நடித்து வருகிறேன். தொடர்ந்து பட வாய்ப்புகள், வெப் சீரிஸ் வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதால் என்னால் நடிப்பை விட முடியவில்லை. திருமணம் செய்து கொள்வதற்கு சில முக்கியமான பொறுப்புகள் தேவை. அதற்கு நான் தயாராகி விட்டதாக உணரும்போது திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளேன். எனது திருமணம் எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம். அதற்கான நேரம் காலம் நெருங்கி வருவதாக நினைக்கிறேன்,'' என்கிறார் தமன்னா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !