பெண் வேடத்தில் சாண்டி மாஸ்டர் - வைரலாகும் பட போஸ்டர்
ADDED : 687 days ago
நடன இயக்குனர் சாண்டி தற்போது படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய் நடித்து வெளிவந்த 'லியோ' படத்தில் வில்லனாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்நிலையில் கன்னட சினிமாவில் சாண்டி நடிகராக அறிமுகமாகிறார். கன்னட இயக்குனர் ஷூன்யா இயக்கும் இப்படத்திற்கு 'ரோசி' என தலைப்பு வைத்துள்ளனர். இதில் நடிகர் யோகேஷ் கதாநாயகனாக நடிக்கின்றார். இப்படத்தில் ஆண்டாள் என்ற கதாபாத்திரத்தில் சாண்டி நடிக்கின்றார். பெண் தோற்றத்தில் அவரது பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இதை வைத்து பார்க்கையில் படத்தில் அவர் பெண் வேடத்திலோ அல்லது திருநங்கை வேடத்திலோ நடிக்கலாம் என தெரிகிறது.