12-த் பெயில் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றிய சூர்யா
ADDED : 697 days ago
ஹிந்தியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 12-த் பெயில் என்கிற திரைப்படம் வெளியானது. விது வினோத் சோப்ரா இயக்கத்தில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விக்ராந்த் மாசே கதாநாயகனாக நடித்திருந்தார். அனுராக் பதக் என்பவர் எழுதிய புத்தகத்தை தழுவி இந்த படம் உருவாகி இருந்தது. மிகவும் ஏழ்மையான நிலையில் இருகும் ஒருவர் ஐபிஎஸ் அதிகாரியாக மாறும் பின்னணியில் கதை உருவாக்கப்பட்டு இருந்தது.
தற்போது இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை நடிகர் சூர்யா கைப்பற்றியுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் இந்த படத்தில் சூர்யா நடிப்பாரா அல்லது அவரது 2டி நிறுவனம் சார்பாக வேறு ஹீரோ நடிக்க இதனை ரீமேக் செய்ய இருக்கிறார்களா என்பது குறித்து எல்லாம் இனிமேல் தான் ஒவ்வொன்றாக வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.