கேரளாவில் நடந்த கார்த்திகா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து
ADDED : 802 days ago
80களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ராதா. அவரது மூத்த மகள் நடிகை கார்த்திகா நாயருக்கும், ரோகித் மேனனுக்கும் இன்று(நவ., 19) திருவனந்தபுரத்தில் உள்ள பீச் ஹோட்டல் ஒன்றில் திருமணம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் 80களில் முன்னணி கதாநாயகிகளான ரேவதி, ராதிகா, சுஹாசினி, பூர்ணிமா, மேனகா, நடிகர்கள் சிரஞ்சீவி, பாக்யராஜ், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமணத்தில் இரு வீட்டாரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். ராதிகா, ரேவதி, சுஹாசினி, மூவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.