யோகி பாபுவின் குய்கோ படத்தின் டிரைலர் வெளியானது!
ADDED : 728 days ago
யோகி பாபு நாயகனாக நடித்துள்ள புதிய படம் குய்கோ. இந்த படத்தில் விதார்த்தும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். வருகிற 24ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், கிராமத்தில் மாடு மேய்ப்பவனாக இருக்கும் யோகி பாபு, ஒரு பெண்ணை காதலிக்கிறார். ஆனால் மாடு மேய்க்கிறவனுக்கு பெண் தர மாட்டோம் என்று கூறி விட, கடுமையான கோபத்தில் சவுதிக்கு சென்று பணக்காரராகி விடுகிறார்.
அந்த நேரத்தில் அவரது தாயாரின் மரணச் செய்தியை கேட்டு சொந்த ஊருக்கு திரும்புகிறார். அப்போது அவரது அம்மாவின் பிணம் காணாமல் போய்விடுகிறது. இதை அடுத்து என்ன நடக்கிறது என்பதே இந்த படத்தின் கதையாக உள்ளது. காமெடி கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை அருள் செழியன் என்பவர் இயக்கி உள்ளார்.