உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அனிமல் படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ்

அனிமல் படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ்

அர்ஜுன் ரெட்டி பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா மற்றும் நடிகர் ரன்பீர் கபூர் கூட்டணியில் ஹிந்தியில் தயாராகியுள்ள திரைப்படம் 'அனிமல்'. டி சீரியஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் வருகின்ற டிசம்பர் 1ம் தேதி அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

இதன் டிரைலர் இன்று வெளியாகி உள்ள நிலையில் தற்போது இத்திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு, தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். 18 வயது கடந்தவர்கள் மட்டுமே இப்படத்தை தியேட்டரில் காண முடியும். மேலும், இப்படம் 3 மணி நேர 23 நிமிடங்கள் 21 நொடிகள் நீளம் கொண்ட படமாக வெளியாகும் என இதன் இயக்குனர் சந்தீப் ரெட்டி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !