மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
651 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
651 days ago
மம்முட்டியை வைத்து போக்கிரி ராஜா, மதுர ராஜா என இரண்டு படங்களை இயக்கியவர் பிரபல மலையாள இயக்குனர் வைசாக். புலி முருகன் இயக்குனர் என்று சொன்னால் அனைவருக்கும் இவரை பளிச்சென தெரியும். தற்போது மீண்டும் மம்முட்டியை வைத்து டர்போ என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
சமீபகாலமாக தமிழ் திரைப்படங்களில் வில்லனாக முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வரும் தெலுங்கு நடிகர் சுனில் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் மலையாள திரை உலகில் நுழைந்துள்ளார்.
தற்போது பிரபல கன்னட இயக்குனரும், நடிகருமான ராஜ் பி ஷெட்டி என்பவரும் இந்த படத்தில் இன்னொரு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் ஒரு போஸ்டருடன் வெளியிடப்பட்டுள்ளது.
651 days ago
651 days ago