ஆயத்தமான ‛காந்தாரா 2' : நவ., 27ல் முதல்பார்வை வெளியீடு
ADDED : 680 days ago
கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கம், நடிப்பில் வெளியான படம் 'காந்தாரா'. குறைந்த பட்ஜெட்டில் தயாராகி ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது. இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என ஏற்கனவே அறிவித்திருந்தார் ரிஷப் ஷடெ்டி. படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடந்து வந்தன. இப்போது அது நிறைவடைந்த நிலையில் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இந்தபடம் காந்தாரா படத்தின் முந்தைய கதையாக உருவாக உள்ளது. இப்படத்தின் முதல்பார்வை வரும் 27ல் ரிலீஸாவாதாக அறிவித்துள்ளனர். அதோடு படத்திற்கு ‛காந்தாரா: சாப்டர் ஒன்' என பெயரிட்டுள்ளனர். முதல்பாகத்தை போலவே இதுவும் பான் இந்தியா படமாக தயாராக உள்ளது. அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.