உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ்

மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடர் ரசிகர்களின் வரவேற்பை பெற்று நல்ல அளவில் ரீச்சாகி வருகிறது. இந்த தொடரில் கங்கா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பிரதீபா நடித்து வந்தார். ஆனால், தனிப்பட்ட காரணங்களால் பிரதீபா, மகாநதி சீரியலை விட்டு விலகிவிட்டார். இந்நிலையில், கங்கா கதாபாத்திரத்தில் இனி திவ்யா கணேஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாக்கியலெட்சுமி தொடரில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான திவ்யா கணேஷ் தற்போது மீண்டும் விஜய் டிவியிலேயே என்ட்ரி கொடுத்திருப்பதால் அவரது ரசிகர்களும் மகிழ்ச்சியில் வாழ்த்துகள் சொல்லி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !