சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு?
ADDED : 678 days ago
அர்ஜுன் ரெட்டி பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா தற்போது ஹிந்தியில் 'அனிமல்' என்கிற படத்தை நடிகர் ரன்வீர் கபூரை வைத்து இயக்கியுள்ளார். ராஷ்மிகா நாயகியாக நடித்துள்ளார். இப்படம் வருகின்ற டிசம்பர் 1ந் தேதி திரைக்கு வருவதை முன்னிட்டு படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சந்தீப் ரெட்டி வங்கா கூறியதாவது, நான் அர்ஜுன் ரெட்டி படத்திற்கு பிறகு மகேஷ் பாபுவிற்கு 'டெவில்' என்கிற படத்தின் கதையை கூறினேன். அது அனிமல் படம் அல்ல. அது அனிமல் படத்தை விட வைலன்ட் ஆக இருக்கும். இதனை மகேஷ் பாபு மறுக்கவில்லை என்று தெரிவித்தார்.