ஜெயம் ரவியின் ‛காதலிக்க நேரமில்லை'
ADDED : 677 days ago
இறைவன் பட தோல்விக்கு பின் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்து சைரன், பிரதர் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. அடுத்து கமலின் தக் லைப் படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையே கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ரவி. நித்யா மேனன் நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு காதலிக்க நேரமில்லை என பெயரிட்டு முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இதே பெயரில் 1964ல் ஸ்ரீதர் இயக்கத்தில் முத்துராமன், ரவிச்சந்திரன், காஞ்சனா, ராஜஸ்ரீ, நாகேஷ், பாலைய்யா உள்ளிட்டோர் நடிப்பில் ஒருபடம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.