உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் போலீஸாக மிரட்ட வரும் விஜய் ஆண்டனி

மீண்டும் போலீஸாக மிரட்ட வரும் விஜய் ஆண்டனி

சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் “வள்ளி மயில்”. இதன் படப்பிடிப்பு திண்டுக்கல், கொடைக்கானல், பழனி, மதுரை, திருநெல்வேலி என பல பகுதிகளில் நடைபெற்றது. பரியா அப்துல்லா, பாரதிராஜா, சத்யராஜ், சுனில், தம்பிராமையா, ஜிபி முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கிறார்.

ஏற்கனவே இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இதன் டீசரை படக்குழுவினர் வெளியிட்டனர். இப்படம் 1980களில், நாடக கலையின் பின்னனியில் நடக்கும் ஒரு த்ரில்லராக உருவாகியுள்ளது. மேலும், திமிரு பிடிச்சவன், தமிழரசன் படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி மீண்டும் இதில் போலீஸ் அதிகாரி ஆக நடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !