உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஜித் எடுத்த அதிரடி முடிவு

அஜித் எடுத்த அதிரடி முடிவு

நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் தனது அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். இதனை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பதாக தகவல் பரவி வருகிறது.

அஜித் கடந்த சில வருடங்களாக ஒரு தயாரிப்பாளருக்கு இரண்டு அல்லது மூன்று படங்கள் ஒப்பந்தம் செய்து நடித்து வந்தார். இந்த நிலையில் இனி அந்த மாதிரி ஒரே தயாரிப்பாளருக்கு தொடர்ந்து படங்கள் நடித்து தர வேண்டாம் என முடிவு எடுத்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !