உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஜித் - வெற்றிமாறன் கூட்டணி?

அஜித் - வெற்றிமாறன் கூட்டணி?

நடிகர் அஜித்குமார் தற்போது 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார் . இதையடுத்து அவரின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இதனை ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து சமீபகாலமாக இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த காரணத்தால் ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் நிறுவனம் இதற்கு அடுத்த அஜித் படத்தை தயாரிப்பதாக கூறப்படுகிறது. இதனை அஜித், வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக்க திட்டமிட்டு வருவதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !