நயன்தாரா, தமன்னாவை ஓவர்டேக் செய்த வாமிகா கபி
ADDED : 696 days ago
2023ம் வருடம் இந்த மாதத்துடன் முடிவடைவதை தொடர்ந்து இந்த வருடத்தில் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட பிரபலமான நட்சத்திரங்களின் தரவரிசை பட்டியலை ஐஎம்டிபி தற்போது வெளியிட்டுள்ளது. இதில் முதல் இடத்தில் பதான், ஜவான் என இரண்டு வெற்றிப்படங்களில் நடித்ததற்காக ஷாருக்கானும், ஆலியா பட் இரண்டாவது இடத்திலும், தீபிகா படுகோனே மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்,
ஆச்சரியமாக நான்காவது இடத்தை நடிகை வாமிகா கபி பிடித்துள்ளார். அவருக்கு அடுத்து ஐந்தாவதாக நயன்தாராவும் ஆறாவதாக தமன்னாவும் இடம் பிடித்துள்ளனர். இவர்களுக்கு பின்னர் ஏழாம் இடத்தில் கரீனா கபூரும் எட்டாவது இடத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த சோபிதா துலிபாலாவும், ஒன்பதாவது இடத்தில் நடிகர் அக்ஷய் குமாரும் இருக்கின்றனர். ஒரே ஒரு தமிழ் ஹீரோவாக நடிகர் விஜய்சேதுபதி பத்தாவது இடத்தை பிடித்துள்ளார்.