காதலியை கரம்பிடித்த குருவி தமிழ்செல்வன்
ADDED : 681 days ago
சின்னத்திரை சீரியல்களில் காமெடி நடிகராக நடித்து வருகிறார் குருவி தமிழ்செல்வன். முன்னதாக அபியும் நானும் தொடரில் நடித்திருந்த தமிழ்செல்வன் தற்போது மிஸ்டர் மனைவி, புது வசந்தம் ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார். இவர் தனது நீண்டநாள் காதலியான பூர்ணிமாவை தற்போது கரம்பிடித்துள்ளார். இவர்களது திருமணம் கடந்த நவம்பர் 28 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது. தமிழ்செல்வனின் திருமண புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் சக நடிகர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.