அதிர்ஷ்டசாலியாக மாறிய மாதவன்
ADDED : 755 days ago
திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் மித்ரன்.ஆர். ஜவஹர் அடுத்து நடிகர் மாதவனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர். தற்போது இதன் படப்பிடிப்பு ஸ்காட்லாந்து பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இப்படத்திற்கு 'அதிர்ஷ்டசாலி' என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு கதை மாதவன் எழுதியுள்ளார். மேலும், இதில் கதாநாயகியாக ஷர்மிளா மந்த்ரே மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார் நடித்து வருகின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.