உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சசிகுமார் - சரத்குமாரின் 'நா நா' டிச., 15ல் ரிலீஸ்

சசிகுமார் - சரத்குமாரின் 'நா நா' டிச., 15ல் ரிலீஸ்

நடிகர்கள் சசிகுமார் மற்றும் சரத்குமார் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் 'நா நா'. கல்பதரு பிக்சர்ஸ் பி.கே. ராம் மோகன் தயாரிப்பில், என்வி நிர்மல் குமார் இயக்கி உள்ளார். ஆக்ஷன் கலந்த திரில்லர் படமாக உருவாகி உள்ளது. ஹர்ஷ வர்தன் ரமேஷ்வர் படத்திற்கு இசையமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை கதை பார்வையாளர்களை ஈர்க்கும் என்கிறார்கள் படக்குழுவினர். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வந்தன. தற்போது இந்த படத்தை வரும் டிச., 15ம் தேதி ரிலீஸ் செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !