ஸ்ரேயா போட்டோ ஷுட்டுக்கு உதவி செய்த மகள்
ADDED : 680 days ago
'சிவாஜி' பட நடிகையான ஸ்ரேயா சரண் திருணமாகி பெண் குழந்தைக்கு அம்மாவானவர். சமூக வலைத்தளங்களில் அடிக்கடி போட்டோக்களைப் பதிவிடுவது ஸ்ரேயாவின் வழக்கம்.
சமீபத்தில் போட்டோ ஷுட் ஒன்றை நடத்திய போது தன் மூன்று வயது மகள் உதவி செய்யும் போட்டோக்களைப் பதிவிட்டு மகிழ்ந்துள்ளார் ஸ்ரேயா. அம்மாவுக்காக கண்ணாடியைப் பிடித்து உதவி செய்திருக்கிறார் அந்த குட்டிக் குழந்தை. மகளின் செய்கை ஸ்ரேயாவுக்கு எவ்வளவு மகிழ்வைத் தந்துள்ளது என்பதை அந்த புகைப்படங்களைப் பார்க்கும் போதே தெரிகிறது.
ஸ்ரேயா தற்போது எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. ஆனால், இந்த ஆண்டில் அவர் நடித்து 'கப்ஜா' என்ற கன்னடப் படமும், 'மியூசிக் ஸ்கூல்' என்ற ஹிந்திப் படமும் வெளிவந்துள்ளது.