உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / யார் செத்தாலும் இந்த சண்டை சாகாது : கவனம் ஈர்க்கும் பைட் கிளப் டீசர்

யார் செத்தாலும் இந்த சண்டை சாகாது : கவனம் ஈர்க்கும் பைட் கிளப் டீசர்

லோகேஷ் கனகராஜ் தனது ஜி குவாட் நிறுவனத்தின் சார்பாக வெளியிடும் முதல் படம் பைட் கிளப். உறியடி விஜயகுமார் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தை அப்பாஸ் ரஹமத் இயக்கி உள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இந்த படம் டிசம்பர் 15ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த டீசரில், நான் பொறக்குறதுக்கு முன்னாடியே பிறந்த சண்டை இது. யார் செத்தாலும் இந்த சண்டை சாகாது. வேற வேற பேர்ல, வேற வேற ஆளுங்க இங்க அடிச்சுக்கிட்டே தான் இருக்க போறாங்க என்ற டயலாக் உடன் தொடங்கும் இந்த டீசர் முழுக்க ஆக்ஷன் காட்சிகளாக இடம் பெற்றுள்ளது. அதோடு கமலின் பழைய விக்ரம் படத்தில் இடம்பெற்ற எஞ் ஜோடி மஞ்ச குருவி பாடலின் பின்னணியில் ஒரு சண்டை காட்சியும் இடம்பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !