பொங்கல் ரேஸிலிருந்து ஒதுங்கிய விஜய் தேவரகொண்டா படம்
ADDED : 1022 days ago
கீதா கோவிந்தம் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா , இயக்குனர் பரசுராம் உடனான கூட்டணியில் உருவாகி வரும் படம் 'பேமிலி ஸ்டார்'. இதில் நடிகைகள் மிருணாள் தாகூர், திவ்யன்ஷா கவுசிக் ஆகியோர் நடிக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு இப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது என அறிவித்தனர். சமீபகாலமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறாததால் தள்ளிப்போவதாக கூறப்பட்டு வந்த நிலையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ பேமிலி ஸ்டார் படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை. 2024 மார்ச் மாதத்தில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.