உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தி கேர்ள் பிரண்ட் படப்பிடிப்பில் இணைந்த ராஷ்மிகா

தி கேர்ள் பிரண்ட் படப்பிடிப்பில் இணைந்த ராஷ்மிகா

தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட்டிலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் இவரது நடிப்பில் அனிமல் படம் வெளியாகி வசூலை குவித்து வருகிறது. 'ரெயின்போ' என்கிற படத்திற்கு பிறகு ராஷ்மிகா மீண்டும் 'தி கேர்ள் பிரண்ட்' எனும் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்த படத்தை பாடகி சின்மயி கணவர், நடிகர் மற்றும் இயக்குனர் ராகுல் ரவீந்திரன் இயக்குகிறார். ஹேசம் அப்துல் வாகப் இசையமைக்கும் இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். நேற்று டிசம்பர் 5ந் தேதி இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது. இதில் ராஷ்மிகா கலந்து கொண்டுள்ளார். முதற்கட்ட படப்பிடிப்பு இன்னும் 20 நாட்கள் தொடரும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !