சென்னை பெருவெள்ளத்தில் சிக்கி தவித்த கனிகா மீட்பு
ADDED : 676 days ago
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து பெருவெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பலரும் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகையான கனிகா, தனது குடியிருப்பு இடத்தை சுற்றி வெள்ளநீர் சூழ்ந்துள்ள புகைப்படங்களை வெளியிட்டு சிக்கி தவித்ததாக கூறினார். இதனையடுத்து மீட்பு குழுவினர் அங்கு சென்று கனிகாவை பத்திரமாக மீட்டுள்ளனர். இதற்காக நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ள கனிகா, 'நாங்கள் மீட்கப்பட்டோம். குடிநீர் விநியோகம் இல்லை. மின்சாரம் இல்லை. வெள்ளநீர் அளவு அதிகரித்து கொண்டே இருக்கிறது. எங்களுக்கு வேறு வழியே இல்லை. மீட்பு குழுவினருக்கும் அவர்கள் முயற்சிக்கும் நன்றி' என்று கூறியுள்ளார்.