என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் இல்லை - அனுயா
ADDED : 716 days ago
சிவா மனசுல சக்தி, மதுரை சம்பவம், நண்பன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அனுயா. பட வாய்ப்பு இல்லாத இவர் இன்ஸ்டாவில் சுறுசுறுப்பாக உள்ளார். சமீபத்தில் இவர் வெளியிட்ட வீடியோவில், ‛‛நான் துபாயில் பிறந்தவள். எனக்கு தமிழ் கொஞ்சம் தான் தெரியும். பொறியியல் படிப்பு முடித்ததும் சினிமாவுக்கு வந்தேன். விஜய் ஆண்டனி, சுந்தர் சி, ஜீவா ஆகியோருடன் என்னை இணைத்து வதந்தி பரப்புகின்றனர். அவையெல்லாம் தவறான தகவல். நான் தனியாகத்தான் உள்ளேன்'' என்றார். இதை பார்த்த ரசிகர் ஒருவர் ‛‛ஏன் தனியாக இருக்கிறீர்கள்.. திருமணம் செய்யலாமே'' என்றார். அதற்கு, ‛‛என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் யாரும் இல்லை'' என்றார் அனுயா.